குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெகதீப் தன்கரை கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாஜக அறிவித்து, 2025 வரை துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
மேலும் 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். 1990 – 1991 வரை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் 1993 மற்றும் 1998 க்கு இடையில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

