சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல நடைபயிற்சியி சென்ற போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில்முதலமைச்சர் மு க ஸ்டாலினின் திருப்பூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் சுவாமிநாதன்.
