டாக்காவில் பயங்கர விமான விபத்து : 19 பேர் பலி…100 பேர் காயம்… பரபரப்பு வீடியோ….!

By Nanthini on ஆடி 21, 2025

Spread the love

வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மயில் ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வங்கதேச விமான படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மதியம் நிகழ்ந்த நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விமானி உட்பட குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த போது பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். விமானம் பள்ளியின் மூன்று மாடி கட்டிடத்தின் முன் பகுதியில் விழுந்து தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்ப பகுதியில் மீட்பு பணியில் நடைபெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.