BREAKING: மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை… சற்றுமுன் வெளியான தகவல்..!

By Nanthini on ஆடி 21, 2025

Spread the love

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல நடைபயிற்சியி சென்ற போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனையில் CM ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மகன் உதயநிதி ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு நேரில் விரைந்துள்ளார்.  இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் அப்டேட் கொடுத்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தலுக்கு பிறகு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு திமுக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.