சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டு போறான்… இப்போ அப்பா எங்கே போனாரு..? ஸ்டாலினை கடுமையாக சாடிய EPS..!!

By Soundarya on ஆடி 19, 2025

Spread the love

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டத்தில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணத்தில் பேசியதாவது, “அதிமுக அரசு உங்க அரசு. உங்க கட்சி. அதிமுக நன்மை செய்யும் கட்சி. திமுக கொள்ளையடிக்கும் கட்சி. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டு போகிறான். குற்றவாளிக்கு அச்சம் கிடையாது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்குமே பாதுகாப்பில்லை. அப்பா என்று சொல்கிறார். பிள்ளை கதறும் போது எங்கே போனார்? அப்பா அப்பான்னு சொன்னால் மட்டும் போதுமா? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார். நான் பொய் சொல்கிறேனா? உண்மைதானே பேசுகிறேன். நல்லாட்சியை நாங்கள் மீண்டும் கொடுப்போம். நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம். நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரிசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்த என ஏராளமான கோரிக்கைகளை சொல்லி இருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் அதை செய்து கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.