ஒடிசா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் துரியோதனராவ். 28 வயதான இவருடைய மனைவி பார்வதி( 22{). இவர்கள் குருகிராம் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். ராவ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். பார்வதி கால் சென்ட்ரலில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் உணவு சமைத்து முடித்த பிறகு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்கள். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது பார்வதி மொட்டை மாடிசுவரின் விளிம்பில் ஏறி இருபுறமும் கால் தொங்கியவாரு அமர்ந்தபடி, விளையாட்டிற்காக ராவிடம் நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா? என்று விளையாட்டாக கேட்டிருக்கிறார்.
அதற்கு ராவ் கீழே இறங்குவாயா? என்று சொல்லிக் கொண்டு அவரை பிடிக்க முற்பட்டுள்ளார். ஆனால் பார்வதி நிலை தடுமாறியதால் அவரால் மேலே இழுக்க முடியவில்லை. இதனையடுத்து கையில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார் .உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்துவிட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த விசாரணையில் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கணவரின் உடலில் காயங்கள் இருந்ததன் மூலம் அவர் மனைவியை காப்பாற்ற முற்பட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் பார்வதியின் குடும்பத்தினரும் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றும் கூறினார்கள்.
