நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமான கிங் படம் உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு மும்பையில் உள்ள திரைப்பட ஸ்டுடியோவில் ஒரு ஆக்ஷன் காட்சியின் போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு தசை காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது தசை பிரண்டு இருப்பதாகவும் ஒரு மாதம் ஓய்வெடுக்கும் படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காயம் காரணமாக ஷாருக்கான் அமெரிக்காவிற்கு தேவையான சிகிச்சை பெற அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஷாருக்கான் உடல்நிலை சரியாகி படப்பிடிப்பு தளத்திற்கு திரும்ப தயாரானதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
