தமிழகத்தில் காலையிலேயே ஷாக்..! ஜேசிபி மீது மோதிய ஆம்னி பேருந்து… பயங்கர விபத்தில் 12 பேர் படுகாயம்..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து. 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அதாவது மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து திடீரென்று ஜேசிபியின் மீது மோதியது.

இதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.