கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பணிபுரியும் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை நான்காம் தேதி அதிர்ச்சிகரமான புகார் ஒன்று தெரிவித்து இருந்தார். அதாவது கடந்த 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தா.ர் மேலும் அவர்களின் உடலை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோவில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதில் அந்த முன்னாள் ஊழியரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வாக்குமூலம் பெற்றிருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய அம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், மாணவர்களை பலாத்காரம் செய்து அவர்களின் உடலை புதைத்ததாக கூறப்படும் இந்த வழக்கில் புகார்தாரர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடத்தில் குழி தோண்டி உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியும் நடைபெற உள்ளது. ஒருவேளை அவர் கூறும் தகவல் உண்மைக்கு புறம்பாக இருந்தால் அவர் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது சாதாரண விஷயம் கிடையாது. எந்த சட்ட நடைமுறையும் செய்யாமல் நடவடிக்கை எடுத்து விட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகள் அனைத்தும் விசாரணை அதிகாரியால் தீர்மானிக்கப்படும். இந்த விவகாரத்தை விசாரணை அதிகாரி முடிவே இறுதியானது என்று கூறியுள்ளார்.
