தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றார்.
இப்படியான நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 10 மணி அளவில் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில், உறுப்பினர் சேர்க்கையை மையமாக வைத்தே இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
