பிரபுவின் சின்னதம்பி படத்தில் கவுண்டமணி செந்தில் காமினேஷன் சூப்பராக இருக்கும். இந்த படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை அனுஜா. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டது. 1986 ஆம் வருடம் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் வசந்தம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “சினிமாவில் அறிமுகமான புதிதில் முதலில் கவர்ச்சியான பாடல்களுக்கு தான் நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு சிறிய இடைவெளி விட்டு குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

கவர்ச்சி பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது குறித்து எங்கள் வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. காரணம் அவர்களுக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. நான் கவுண்டமணி செந்தில் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளேன். கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் கிண்டல் செய்வது போல ஆரம்பத்தில் என்னையும் கிண்டல் செய்வார். அது அவர் பொதுவாக எந்த நபர் பக்கத்தில் இல்லையோ அவரை பற்றி தான் இன்னொருவரிடம் அதிகமாக பேசுவார். ஆனால் செந்தில் அப்படி கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறவர்களை பற்றி மட்டும் தான் பேசுவார்.

அவர்களிடம் பாசமாக பேசுவார் அவ்வளவுதான். ஆனால் கவுண்டமணி கொஞ்சம் அகம்பாவம் அதிகம். ஒரு கட்டத்தில் என்னிடம் அதிகாரமாக பேசுவது போல நானும் அவரிடம் திருப்பி பேச ஆரம்பித்து விட்டேன். அவர் எல்லா நடிகர்களையும் மட்டம் தட்டி தான் பேசுவார். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவரை நேருக்கு நேராக திட்டி விட்டேன். அதன் பிறகு அவரோடு நடிப்பது எனக்கு நின்று விட்டது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் அனுஜா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரீல்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீப காலமாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவரை பார்த்த பலரும் நடிகை அனுஜாவா இது? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் .
