ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை நாளான அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
அதனைப் போலவே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
