பா. ரஞ்சித்தின் ஷூட்டிங்கில் தமிழ் பிரபலம் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகம்.. பெரும் துயரம்..!

By Nanthini on ஆடி 14, 2025

Spread the love

இயக்குனர் பா ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சிகள் ஈடுபட்ட போது தவறி விழுந்து திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட சில வினாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்கவில்லை.

pa ranjith - vettuvam

   

இந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் திருவள்ளூரில் நடந்த படப்பிடிப்பின் போது துணை நடிகர் மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.