தாஜ்மஹால் ஒரு அழகான வரலாற்று நினைவுச் சின்னமாகும். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தினம்தோறும் வந்து செல்கிறார்கள். இது இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று தளம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. அதன் அழகு பல நூற்றாண்டுகளாக இதயங்களை வென்று அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக உள்ளது. தாஜ்மஹால் காதல் மற்றும் கட்டிடக்கலையின் சின்னமாகும்.
இது இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றது. இப்படியான நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இந்த வரலாற்று பாரம்பரியத்தின் நிலைமையை வெளிப்படுத்தி உள்ளது. தாஜ்மஹாலுக்கு பின்னால் இருக்கும் குப்பை குவியலை ஒரு வெளிநாட்டு பெண் வீடியோவாக எடுத்து பகிர்ந்து உள்ள நிலையில் அது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தாஜ்மஹாலுக்கு பின்னால் யமுனை நதிக்கரையில் குப்பை குவியல்களும் தேங்கி நிற்கும் கழிவு நீரும் காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. தாஜ்மஹாலுக்கு அருகே குப்பை மற்றும் கழிவு நீரை பார்த்த போலந்து சுற்றுலா பயணிகள் சங்கடமாக உணர்கின்றனர். அதில் ஒரு வெளிநாட்டு பெண் தன்னுடைய மூக்கை மூடிக்கொண்டு அசுத்தங்களை பார்த்ததும் வாந்தி எடுக்க தொடங்குவது போலவும் வீடியோவில் தெரிகிறது. தாஜ்மஹால் எங்கே இருக்கிறது, இந்த துர்நாற்றம் தாங்க முடியாதது என்று சுற்றுலாப் பயணிகள் கூறுவதை வீடியோவில் கேட்க முடிகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னத்தின் இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
