இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவல் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். ஒலிம்பிக் பெண்களும், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனிடையே சாய்னா நோவலுக்கும் முன்னால் இந்திய பேட்மின்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். இப்படியான நிலையில் 7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா நோவல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
