தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுபக்கம் இபிஎஸ் இந்த முறை ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகின்றார். அதற்கான வேலைகளையும் இபிஎஸ் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணமும் சென்று கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் 2026 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். வானூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஸ்டாலின் அரசு தற்போது கொடுப்பது ஆயிரம் ரூபாய். ஆனால் வீட்டு வரி மற்றும் விலைவாசி உயர்வு என மாதம்தோறும் இரண்டாயிரத்தை பிடுங்குகிறது. கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்து விட்டு அதில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
