3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை.. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் ஜூலை 12 இன்று 3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலும் குரூப்-4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கு இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தான் என்றாலும் கூட டிகிரி மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிறுவப்பட உள்ளது. நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் வந்து விட வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் தங்களுடைய ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

   

தேர்வு நேர முடிவதற்கு முன்பாக தேர்வர் தேர்வரையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு கூட அனுமதிச்சீட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால் தேவர் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் தன்னுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட முறையாக கையொப்பமிட்டு தேர்வு கூட அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் நகலை இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஹால் டிக்கட்டை tnpsc-யின் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.