தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக பலமுறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். திருமணம் செய்ய முடிவு வரை சென்றும் காதல் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது. ஆனால் அந்த காதல் தோல்விக்கு நான் காரணம் இல்லை என்று சுருதிஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நான் எப்பொழுதுமே அம்மாவாக வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் சிங்கிள் parent ஆக இருக்க விரும்பவில்லை. ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் ரொம்பவே முக்கியம். இரண்டு பெற்றோர் இருந்தால் தான் அது சிறந்ததாக இருக்கும். சிங்கிள் parent ஆக இருப்பவர்களை நான் அவமானப்படுத்தவில்லை. நான் தத்தெடுக்கலாம் என்று கூட நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
