தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார்.
சமீபத்தில் வாழை படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடைத்தை பிடித்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கலையரசன், “தமிழ் சினிமாவில் ஜாதி இல்லைன்னு சொல்கிறார்கள். ஆனால் சினிமாவில் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் பா .ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி படம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
