கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காவேரி(70) இவர் வீட்டிலேயே மாடுகளை வளர்த்து அதன் மூலமாக வருமானம் ஈட்டியை வருகிறார். இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரோடு என்பவரோடு திருமணம் ஆன நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து முதல் மனைவியின் அக்காவான கணவரை பிழிந்து வாழ்ந்து வந்த மங்கம்மாளை காவேரி இரண்டாவதாக திருமணம் செய்து அவரோடும் கருத்து வேறு ஏற்பாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை அடுத்து 45 வயதான கோவிந்தம்மாள் என்பவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கும் காவிரிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.
இதனால் காவேரி கோவிந்தம்மாளை தன்னுடைய வீட்டிலே தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காவேரி வழக்கம் போல தன்னுடைய மாட்டிற்கு தீவனம் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது 45 வயதான கோவிந்தம்மாளும் அவருடைய அண்ணன் மகன் தங்கராஜூம் உல்லாசமாக இருந்துள்ளார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவேரி கதவை உடைத்து உள்ளே சென்றபோது உடனே தங்கராஜ் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து மூன்று வருடங்களாக கோவிந்தம்மாளுக்கும் அவருடைய அண்ணன் மகனுக்கும் தகாத உறவு இருந்து வந்தது காவேரிக்கு தெரிந்ததால் “அவன் உனக்கு தம்பி முறை” மூன்றாவதாக வாழ வந்த நீ இப்படி செய்யாதே.. என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனையடுத்து இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபத்தில் காவேரி அரிவாளால் கோவிந்தம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளா. அதன்பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு காவேரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
