ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடத்தின் 26 வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. இதில் லட்சுமி பிரியா, ஆதிரை முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். யாத்திரையின் விலகளுக்கு பின் டிஆர்பி ரேட்டிங் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 5.25 புள்ளிகளாக இருந்தால் இந்த சீரியல் இந்த வாரம் வெறும் நான்கு 4.90 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
சின்ன மருமகள் சீரியல் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.2 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் 5.5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலின் டிஆர்பி கடந்த வாரம் 6.58 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் 6.40 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 7.78 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் வெறும்7.43 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. முதல் இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 8.5 டிஆர்பி ரேட்டிங் கிடைத்த நிலையில் தற்போது இந்த வாரம் 7.85 மட்டுமே கிடைத்துள்ளது.
