4 நாள்களுக்கு ஒரு தடவை தாடிக்கு டை அடித்தால்… ஒய்வு குறித்து சூசகமாக பதிலளித்த விராட் கோலி..!!

By Soundarya on ஆடி 9, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் முன்னணி  பேட்ஸ் மேனான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ல் அறிமுகமான இவர் 2025 இது வரை 123 போட்டிகளில் 9230 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது இந்தியா.  36 வயதிலும் சிறப்பான பிட்னஸ் கொண்டிருந்த இவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென்று ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னும் சில காலம் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விம்பிள்டன் போட்டியை காண வந்த அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், 4 நாள்களுக்கு ஒரு முறை தாடிக்கு டை அடிக்க தொடங்கிவிட்டால், ஓய்வு பெற அதுவே சரியான நேரம் என்று குறிப்பிட்டு, தான் இரண்டு நாள்களுக்கு முன்பாக தான் டை அடித்ததாக கிண்டலாக பதிலளித்துள்ளார்.