கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவரும் 17 வயது இளம்பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு பிறகு இருவரும் புரிந்துள்ளார்கள். பிரிவுக்கு பிறகு அந்தப் பெண் வேறொரு வாலிபரோடு நெருக்கமாக பழகுவதை கண்ட முன்னாள் காதலர் கோபமடைந்துள்ளார். இதனால் காதலித்தபோது அந்த மாணவனும் பெண்ணும் பரிமாறிக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் அவருடைய செல்போனில் இருந்தது. இதனை நீக்குமாறு அந்தப் பெண் மாணவனிடம் தொடர்ந்து வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் மறுத்ததால் மேலும் எல்லாவற்றையும் நீக்கிவிடும்படி பலமுறை அந்த பெண் கேட்ட போதும் மாணவர் தன்னுடைய நண்பர்களிடம் அவற்றை காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் முன்னாள் காதலன் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களையும் படங்களையும் வைத்திருப்பதை நினைத்து கவலை ப்பட்ட போது தன்னுடைய நெருங்கிய தோழியின் உதவியை நாடினார். அவர் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து தோழியின் ஏற்பாட்டில் 12 பேர் கொண்ட கும்பல் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி இளம் பெண்ணின் முன்னாள் காதலனை காரில் கடத்தி வந்துள்ளார்கள். பிறகு அவரை தரையில் உட்கார வைத்து மற்றவர்கள் சுற்றி நின்று பிரம்பு கம்பால் அடித்துள்ளார்கள்.
மேலும் அவரை நிர்வாணப்படுத்தி ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார்கள். அதை அந்த இளம் பெண் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் அனைத்துமே நீக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார் . இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவர் சந்தேகம் அடைந்து மாணவரின் செல்போனை வாங்கி அதிலிருந்து புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் காதலன் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
