பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன் உடற்பயிற்சி செய்யாமல் ஐந்து மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். பொதுவாகவே நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக அவர்களின் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார்கள். முன்னோர்கள் தன்னுடைய 46 வயதில் தமிழ் படத்தில் நடிக்க காத்திருந்த வித்யா பாலனுக்கு அந்த வாய்ப்புகள் தட்டி போனது. இருந்தாலும் இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தி திரையுலகில் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். சிலருக்கு உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாது. ஆனால் வித்யா பாலன் உடற்பயிற்சி செய்யாமலேயே ஐந்து மாதத்தில் 10 கிலோ எடை குறைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்ட நேரத்தில் அதற்காக ட்ரெயினர்ஸ் வைத்து தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அப்போது உடல் எடை குறைந்தாலும் மீண்டும் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யாமல் வேறு மாதிரியான அணுகுமுறைகளை வித்யா பாலன் கையாண்டு உள்ளார். இவர் உடல் எடையை குறைக்க அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொண்டுள்ளார். கீரை மற்றும் வேர்க்கடலை தனது உடலுக்கு ஒத்துக்கொள்ளாததால் அதனை தன்னுடைய டயட்டிலிருந்து அவர் தூக்கி உள்ளார். எடையை குறைக்க விரும்புபவர்கள் சரியான உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் எடை குறைக்க சைவ உணவுகளை உட்கொள்வதுடன் அது உடலுக்கு பக்க விளைவை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். அதனைப் போலவே anti inflammatory என்ற உணவு முறையை தான் இவர் பின்பற்றியுள்ளார். பால் பொருட்களை குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரை, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டது, நன்றாக தூங்கியது என இந்த முறையை வித்யா பாலன் பின்பற்றி வந்துள்ளார். இதற்கு முடிவு மெதுவாக கிடைத்தாலும் தொடர்ந்து இது நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
