வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கிடையாது… தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள நான்கு சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் “NO WORK NO PAY” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.