தமிழக அரசில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 10th முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகி உள்ளது. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 4 ஆகும். திறனறி தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100/- ரூ.35,100. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.