5 ஆண்டுகளில் 785 கணவர்கள் கொலை.. பலே கில்லாடியாக செயல்பட்ட மனைவிகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை..!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

கடந்த சில நாட்களாகவே எந்த செய்தியை பார்த்தாலும் கணவன்மார்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தான் அதிகமாக உள்ளது. ஹனிமூன் சென்ற இடத்தில் கொலை, கள்ளக்காதலனுக்காக கொலை, குடித்துவிட்டு தகராறு செய்வதில் கொலை, கண்களில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் காலை வைத்து மிதித்து கொள்வது என அடுத்தடுத்த பட குற்றச்சாட்டுகளை முன்வைத்து கணவன்மார்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் இந்தியாவில் கணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகி உள்ளது. அதாவது உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 785 கணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக NCRB டேட்டாவில் அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இந்த குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டும் இவ்வளவு கொலை சம்பவங்கள் நடந்துள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.