மும்பை லாத்தூர் மாவட்டம் அடல்டி கிராமத்தில் வசித்து வருபவர் அம்பாதாஸ் பவார். 75 வயதான இவர் வறுமையின் காரணமாக தன்னுடைய விவசாய நிலத்தில் மனைவியோடு சேர்ந்து கடந்த எட்டு வருடங்களாக அவரே ஏர்பூட்டி உழுது வருகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய மனைவியுடன் நிலத்தில் தோளில் கலப்பை பூட்டிக்கொண்டு நிலத்தை உழும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்து நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டாலும் அவருடைய மன உறுதியை பாராட்டினார்கள்.
விவசாயிகள் பலரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இது போன்ற விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாராட்டி வந்தார்கள். இந்த நிலையில் லாத்தூர் மாவட்ட கிரந்திகாரி ஷேத்காரி நேற்று அவருக்கு ஒரு ஜோடி காளை மாடுகளை பரிசாக வழங்கியுள்ளார்கள் . மேளதாளங்களோடு நடனமாடிக்கொண்டே அந்த கிராமத்தில் உள்ள விவசாயின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார்கள். மேலும் தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி உள்ளது.
