இன்றைய தலைமுறையினர் தங்களுடைய காதலர்களுக்காக வித்தியாசமான செயல்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அப்பொழுது மார்க் ஸ்டீவாட் என்பவர் ஒருவர் தன்னுடைய காதலி ஒலிவியா என்பவரிடம் காதலை தெரிவித்துள்ளார். அவரும் தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
இந்த அழகிய தருணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் எரிமலை குழம்பு காற்றில் பறக்கிறது. இந்த புகைப்படத்தில் ஸ்டீவாட் தன்னுடைய காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி இருக்கிறார் .இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
