தெலுங்கு திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றார். அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரபாஸின் குழுவினர் பிஷ் வெங்கட் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்க முன் வந்துள்ளனர். பிரபாஸின் உதவியாளர்கள் நிதி உதவி வழங்குவதாக பிஷ் வெங்கட் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளன.

மாற்று அறுவை சிகிச்சை காண தேதி நிர்ணயிக்கப்பட்டது உதவி செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளனர். பிரபாஸ் தரப்பிலிருந்து கிடைத்த நிதி உதவி ஓரளவிற்கு நிம்மதியை அளித்தாலும் சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை என்றும் தற்போது ஒரு நன்கொடையாளரை கண்டறிய முடியவில்லை என்றும் பிஷ் வெங்கட் மகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வெங்கட்டின் அறுவை சிகிச்சை செலவை முழுமையாக ஏற்பதாக பிரபாஸ் தெரிவித்துள்ள நிலையில் இவருடைய இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
