“யாரையும் காதலிக்காதீங்க”.. இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் இளைஞர் தற்கொலை.. பெரும் சோக சம்பவம்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்ஸ்டார் லைவ் வீடியோவில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஷாபூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் அஹிர்வார் என்ற 20 வயது வாலிபர். இவர் பெண் youtuber ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இடையே திடீரென மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ராகுல் உடனான காதலை முறித்துக் கொண்டார். அதன் பிறகு எவ்வளவோ பேசியும் அந்த பெண் ராகுலுடன் பேச முன்வரவில்லை.

இதனால் மனமுடைந்த ராகுல் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக, இது எனது கடைசி வீடியோ, எனக்கு வாழ விருப்பமில்லை, யாரையும் காதலிக்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் இளைஞர் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.