தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக, பாஜகவினரின் அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.
மேலும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மாநில மாநாட்டை நடத்த வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 10 பேர் வரை தவெக நிர்வாகியாக இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டு கூட்டணி குறித்த முடிவு எடுக்க அவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.
