இன்று தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், “திமுக- பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூட்டணி போக, திமுகவோ அதிமுகவோ இல்லை.
தமிழக வெற்றிக் கழகம். கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றுமே கூட்டணி கிடையாது. கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் மட்டும் தான். தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூருக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கூறியுள்ளார்.
