ஏ.எம் ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கும் படம் ஹரிஹர வீர மல்லு. இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் வில்லன் ஆகவும், முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பாகவும் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆனது மே இரண்டாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
முகலாயப் பேரரசராக பாபி தியோலும், நீதிக்காக போராடும் தனி ஒரு போர் வீரனாக பவன் கல்யானும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
