“வேறு பெண்ணோடு தொடர்பு” கணவனை கொன்றுவிட்டு இரவு முழுவதும்… மனைவி செய்த பகீர் காரியம்..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன். 63 வயதான இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர்.  இவர்  பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. குறிப்பாக பத்மாவதிக்கு தன்னுடைய கணவர் மீது சந்தேகம் இருந்து வந்தது.

அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்புள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பத்மாவதி. இதனையடுத்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கொளஞ்சியப்பன் நள்ளிரவில்  வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது பத்மாவதி தன்னுடைய கணவனை கத்தியால் கழுத்தை அறுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பிறகு காலை வரை பத்மாவதி தன்னுடைய கணவர் உடலுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். பிறகு தன்னுடைய உறவினருக்கு போன் செய்து கணவரை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பத்மாவதியை கைது செய்துள்ளார்கள்.