“போட்டோவுக்கு லைக், தனிமையில் உல்லாசம்” பிரகாஷின் வலையில் சிக்கிய 30 பெண்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

புதுச்சேரியில் 15 வயது சிறுமி ஒருவருடைய ஆபாச புகைப்படம் அவர் தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையின் விசாரணையில், புகைப்படத்தை பதிவிட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பதும், அவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. அவர் புதுவையில் இருந்து தப்பித்து சென்று ஒடிசாவில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து அவரை அபிக்கு சென்று கைது செய்து அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களுடைய அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளது.

இது குறித்த அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமூக வலைதளங்களில் உள்ள பெண்களின் புகைப்படத்துக்கு லைக் போட்டு அதை வர்ணிப்பாராம்.  இதை பார்த்து அவரோடு சாட்டிங் செய்யும் பெண்களை தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என்று அவர்களிடம் நைசாக பேசி அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். அவர்களுக்கு தெரியாமலேயே செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலை பக்கத்தில் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.