தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ஃபிஷ் வெங்கட். இவர் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த புகழ் பெற்றவர். தமிழில் சிறுத்தை உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து உள்ள நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் இவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
