திமுகவுக்கு வந்த புதிய சிக்கல்.. இபிஎஸ் கையில் எடுக்கும் ஆதாரம்… கடும் அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் சாத்தான்குளம் விவகாரம் போல் அஜித் லாக்கப் மரணம் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்படி சாத்தான்குளம் விவகாரம் 2021 தேர்தலில் எதிரொலித்ததோ அதேபோல அஜித் மரண விவகாரத்தையும் அதிமுக கையில் எடுத்து 2026 தேர்தலில் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது. திமுகவின் சின்ன தவறுகளை கூட மக்கள் மத்தியில் இபிஎஸ் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் திமுகவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஆகவே மாறியுள்ளது.