முதல்வர் அவர்களே..! இந்த கொடூர மரணத்தில் உடனடியாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்… TVK தலைவர் விஜய் காட்டம்..!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆறு காவலர்களை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கைதான காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தவக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் நடந்த கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கு உடனடியாக உறுதியும், உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.  அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சிறப்பு குழு அமைத்து விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். மனிதாபிமானம் அறவே அற்று சாமானியருக்கு அநீதி இழைக்கும் துறையாக காவல்துறையை நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.