இந்தியாவைப் பொறுத்தவரையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் ரயிலில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலானூர் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ரயில்வே துறையில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முதலாவதாக ஆதார் இருந்தால் மட்டுமே தட்கல் முன்பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய நடைமுறை ஜூலை 1 நாளை முதல் அமலுக்கு வருகிறது. அடுத்ததாக டிசம்பர் மாதத்திற்குள் புதிய ரிசர்வேஷன் சிஸ்டம் வருகிறது. தற்போது நிமிடத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ரயில்வே வழங்கும் நிலையில் அதனை 1.50 இலட்சமாக உயர்த்தும் வசதி கிடைக்கும். மூன்றாவதாக எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள இந்த மூன்று அறிவிப்புகளும் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
