தமிழகத்தின் அடுத்த CM விஜய் தான்… ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்… அதிரடி காட்டும் TVK..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகத்திற்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள் உள்ளதால் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய ஆனந்த், தமிழக வெற்றிக்கழகம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நம்மிடம் உள்ளனர்.

நமக்கு விலாசம், மூச்சி எல்லாமே விஜய் தான். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் தமிழக வெற்றி கழகத்தில் உள்ளனர். ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வீடுகள் இருந்தால் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கு சராசரியாக 2 லட்சம் பேர் வாக்களிப்பார்கள். தமிழக மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை தமிழக வெற்றி கழகம் கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கட்சி வென்ற தமிழக முதல்வர் பதவியில் விஜய் அமர்வார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று அவர் பேசியுள்ள.