தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னாடி நடிகராக இருந்தவர் தான் நடிகர் சத்தியராஜ். பல திரைப்படங்களில் கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ், நான் பெரியார் படத்தில் நடித்ததற்காக எந்த சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லை.
அதன் பிறகு படத்தை நூறாவது நாள் வெற்றி விழாவில் படத்தில் நடித்ததற்கு பரிசாக பெரியார் சுமார் 90 ஆண்டுகள் அணிந்திருந்த மோதிரத்தை எனக்கு வீரமணி கொடுத்து கலைஞர் கையால் போட்டு விட சொன்னார். அது இன்னைக்கு வரைக்கும் என்னோட கைல தான் இருக்கு. அதனைப் போலவே என் மக்கள் திலகம் எம்ஜிஆரை நான் நேரில் சந்தித்தபோது உனக்கு என்ன வேண்டும் என்று கேள் நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னார். அப்போ நீங்க உடற்பயிற்சி செய்கிற தம்பிள்ஸ் இருந்தா கொடுங்க என்று கேட்டேன். உடனே அவர் சிரிச்சுக்கிட்டே பெருசா ஏதாவது கேள் என்று சொன்னாரு. எனக்கு வேற எதுவும் கேட்க தெரியல என்று சொன்னதும் உடனே அவர் உதவியாளரை அழைத்து அந்த கரலாக்கட்டையை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்தாரு என்று சத்யராஜ் அந்த மேடையில் பேசியுள்ளார்.
