நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிச்சயமான நடிகர் இல்லை என்றாலும் இந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவருக்கு தற்போது 59 வயதாகும் நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரெஞ்சு நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அப்போது வெறும் 26 வயது தான். மிகவும் இளம் வயது பெண்ணை தான் மிலந்த் சோமன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்தது. மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பலரும் கிண்டல் அடித்தனர். அதன் பிறகு இதையெல்லாம் செவி சாய்க்காமல் தன்னுடைய மனைவியுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். அதேசமயம் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வரும் அவர் தற்போது தன் இளம் வயது மனைவியுடன் சேர்ந்து சாலையில் ஜாகிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
