எம்ஜிஆரின் நேர்முக உதவியாளர் மகாலிங்கம் (73) இன்று காலமானார். சென்னை RA புறத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மகாலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் காலமாகிவிட்டார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆரின் மறைவு வரை அவருடன் பணியாற்றினார். இவரது தந்தை குண்டு கருப்பையா எம்ஜிஆர் உடன் படங்களின் நடித்துள்ளார். மகாலிங்கத்தின் ஒரு சகோதரர் குண்டு கல்யாணம். இவர் நடிகரான நிலையில் மற்றொருவரான சாமிநாதர் அதிமுக தலைமையில் கேஷியராக பணியாற்றியவர்.
