ரயில் டிக்கெட் முதல் கிரெடிட் கார்டு, சிலிண்டர் விலை என எல்லாமே மாறப்போகுது.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்பாக பல மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அதுக்கு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பான் கார்டுக்கு இனி ஆதார் தேவை:

   

இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் ஆகும். இந்த விதி ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. உங்களிடம் ஏற்கனவே பான் மற்றும் ஆதார் கார்டு இரண்டும் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பான் கார்டு செயலாற்றதாக கருதப்படலாம்.

   

தட்கல் டிக்கெட் முன்பதிவு:

 

இந்திய ஐஆர்சிடிசி இனி தட்கல் டிக்கெட் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு OTP அங்கீகாரம் தேவை என தெரிவித்துள்ளது. இணையதளம் அல்லது மொபைல் செயலியில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஓடிபி தேவைப்படும்.

வங்கி கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டு விதிகளை எச்டிஎப்சி வங்கி மாற்றியுள்ளது. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் கேமிங் செயலிகளில் பத்தாயிரம் ரூபாய் வரை செலவிட்டால் அதற்கு தனியாக ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதனைப் போலவே paytm, ஃப்ரீ சார்ஜ், போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதற்கு ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம்:

நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வேறு எந்த வங்கியின் ஏடிஎம் இல் இருந்தும் ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு கூடுதல் நிதி பரிவர்த்தனைக்கு 23 ரூபாய் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு 8.50 வசூலிக்கப்படும்.

பயன்பாட்டு பில்களுக்கு கூடுதல் கட்டணம்:

எச்டிஎப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ஜூலை 1 முதல் பயன்பாட்டு பில் செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயன்பாட்டு பில்களுக்கு ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதி எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

எல்பிஜி சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் நிலையில் ஜூலை மாதத்திலும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு:

ஜூலை மாதமே EPFO அதன் புதிய பதிபான EPFO 3.0 ஐ தொடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்காவிட்டால் கண்டிப்பாக ஜூலை மாதம் இது அமலுக்கு வரும். இதன் மூலமாக பணம் எடுப்பது, விவரங்களை கேட்பது, புதுப்பித்தல் போன்ற pf தொடர்பான சேவைகள் முன்பை விட மிக எளிதாகும். இந்த புதிய வசதி அமலுக்கு வந்த பிறகு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது போல EPF ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பி எஃப் கணக்கிலிருந்து நேரடியாக ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.