இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது சிறப்பு அறிவிப்புகளும் சலுகைகளும் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது ஐ ஆர் சி டி சி தனது புதிய AI அடிப்படையிலான சேவையான AskDISHA 2.0 என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் பணத்தை திரும்ப பெறுதல் ஆகியவற்றை பேசுவதன் மூலம் செய்ய முடியும்.
மேலும் இது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை மிகவும் எளிதாக்குகின்றது. இந்த புதிய அம்சம் வீட்டில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ரயில் தகவல், டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தல், டிக்கெட்டுகளை ரத்து செய்தல் மற்றும் பணத்தை திரும்ப பெரும் நிலையை சரிபார்த்தல் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகின்றது. டிக்கெட்டுகள் ஒரு சில கிளிக்குகளில் முன்பதிவு செய்யப்படும். நீங்கள் பயண தேதி மற்றும் இடத்தை மட்டும் சொன்னால் போதும். திட்டம் மாறினால் டிக்கெட் ஐ ரத்து செய்வதும் எளிது.
இந்த புதிய வசதி ஒவ்வொரு படிகளை உங்களுக்கு சொல்லும். பணத்தை திரும்ப பெரும் நிலையை சரிபார்க்க பி என் ஆர் நம்பரை உள்ளிட வேண்டும். உடனடியாக தகவல் உங்களுக்கு கிடைக்கும். இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிதாகும். ஐ ஆர் சி டி வலைதள பக்கத்தில் முகப்பு பக்கத்தில் chatbot என்ற விருப்பம் தெரியும். நீங்கள் டிக்கெட்டை முன் பதிவு செய்ய விரும்பினாலும் அல்லது பணத்தை திரும்ப பெற விரும்பினாலும் கேளுங்கள்.
உங்களுடைய ஆதார் அல்லது பான் கார்டு தகவல் இருக்க வேண்டும். ஆண்ட்டில் கட்டணம் செலுத்திய பிறகு டிக்கெட் உங்கள் மொபைலுக்கு வரும். இந்த சேவை எந்த நேரமும் உங்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் எந்த நேரத்திலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய சேவையின் நன்மை என்னவென்றால் இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் தொந்தரவை குறைக்கிறது. மேலும் இந்திய முழுவதும் உள்ள ஐ ஆர் சி டி சி பயனர்கள் அனைவருக்குமே இந்த சேவை கிடைக்கிறது.
