இனி ரேஷன் பொருள் ரொம்ப கம்மியா தான் கிடைக்கும்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

ரேஷன் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது APL ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த வகை ரேஷன் கார்டு வழங்கப்படும் நிலையில் இதை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குடும்பங்களுக்கு அதிகளவு ரேஷன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவை அரசு குறைத்துள்ளது. அதன்படி ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை மற்றும் 20 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும்.

இந்த ரேஷன் ஒரு கிலோ கோதுமைக்கு இரண்டு ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசிக்கு மூன்று ரூபாய் என்ற விதத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது. ஏனென்றால் இந்த சட்டத்தின் கீ AAY, PHH அட்டைதாரர்கள் மட்டுமே மானிய விலையில் ரேஷன் பெறுகிறார்கள். ஏபிஎல் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவதில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மாநில அரசின் பொறுப்பாகும். எனவே இனி வரும் நாட்களில் ஏபிஎல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை குறைந்த அளவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.