இரவோடு இரவாக கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்… ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய இபிஎஸ்..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் அவர்களுடைய ஆட்சி காலம் முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டன. அதன்படி இந்த முறை அதிமுக கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.

இப்படியான நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கட்சிக்குள் களை எடுக்கும் வேலையை இபிஎஸ் தொடங்கியுள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி ஆனந்த் குமாரை இபிஎஸ் நீக்கினார். இதனை தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்தபாபு நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் அடுத்தடுத்து அதிரடி காட்டுவதால் கட்சியினர் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.