சிம்பு படத்துக்காக வெற்றிமாறன் போட்ட பக்கா பிளான்.. தனுஷுக்கே விபூதி அடிச்சிட்டாங்களே.. என்னப்பா இது..?

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் தான் வெற்றிமாறன். இதில் ஆடுகளம் மற்றும் அசுரனாகிய இரண்டு படங்களுக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். சினிமாவில் வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனராக போற்றப்படுகிறார். வடசென்னை திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் வடசென்னை பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.! -  Cinepettai

   

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றன. படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தனுஷ் கூறியிருந்தார். இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இதுவும் வடசென்னை தொடர்பான கதை தான். வடசென்னை படத்தில் வரும் அமீர் வேடத்தில் நீட்சியாக சிம்புவின் கதாபாத்திரம் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

   

வடசென்னை 2 படத்தில் அந்த ஹீரோ நடிக்கிறாரா?.. அட செமயா இருக்குமே பாஸ் |  Actor Manikandan Will Act in Vadachennai 2 Movie - Tamil Filmibeat

 

இப்படியான நிலையில் சிம்பு நடிக்கும் படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி மற்றும் ஆண்ட்ரியா என அனைவரும் நடிக்க உள்ளனர் என்ற புதிய செய்தி வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் வடசென்னை படத்தில் நடித்தவர்கள். எனவே வெற்றிமாறன் எதை படமாக எடுக்கிறார் என தெரியவில்லை. இவர்கள் எல்லாம் இதிலிருந்தால் தனுஷ் நடிக்கும் வடசென்னை 2 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை சிம்புவுக்காக தனுஷ் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் மறுபக்கம் எழுந்துள்ளது.