பொதுவாக சென்னையில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காக பேருந்து, ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இதுவரை மக்கள் தனித்தனியாக தான் பயணசீட்டு வாங்கி பயணம் செய்து வந்தார்கள். இதற்கிடையில் சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலுமே பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தனியாக செயலியையும் உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்த நிலையில் தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஒரே டிக்கெட்டில் ரயில், பஸ், மெட்ரோவில் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பயணிகள் செல்லும் இடத்தை தேர்ந்தெடுத்து மாநகர பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
